Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபக்திபூர்வமாக நடைபெற்ற மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா

பக்திபூர்வமாக நடைபெற்ற மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி, இன்று (15) காலை 6:15 மணிக்கு,மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருப்பலியில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க,  இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர்
அன்ரன் வைமன் குரூஸ்,  மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர்
இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை,  மடு பரிபாலகர் அருட்தந்தை
பெப்பி சோசை அடிகளார்,  மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை
தமிழ் நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து,  திருச்சொரூப பவனியும் திருச்சொரூப
ஆசீர்வாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும்,
சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான
அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ,
அருட்தந்தையர்கள்,  அருட்சகோதரிகள்,  அரசியல் பிரமுகர்கள்,  அழைக்கப்பட்ட
திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்
கலந்துகொண்டனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments