யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெறும்
நயினை நல்லூர் பாதயாத்திரை நேற்று பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன்
ஆரம்பமாகியுள்ளது.
நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரை இவ்வருடம்
61 வது வருடமாக நயினாதீவு நாக பூசனி அம்மன் ஆலயத்தில் இருந்து நேற்று
ஆரம்பமானது
அகிலம் போற்றும் அகிலாண்ட நாயகி நைனை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நாகம் தாங்கிய வேல் பவனி கடல் மார்க்கமாக குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்து யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வீதி ஊடாக யாழ் நகரப் பகுதியை வந்தடைந்து நல்லை கந்தன் தேர் உற்சவத்தில் கலந்து கொள்ள இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது
வருடா வருடம் நல்லைக் கந்தனின் தேர் உற்சவத்தை முன்னிட்டு இவ் பாதயாத்திரை
நீண்ட. காலமாக நல்லூர் கந்தசுவாமியின் தேர் திருவிழாவில் ஆலயத்தினை
வந்தடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது
நயினாதிவில் இருந்து புறப்பட்ட யாத்திரை குழுவினர் நேற்று புங்குடுதீவில் உள்ள
பிரபல்யமான ஆலயங்களை தரிசித்த பின்னர் புங்குடுதீவில் தங்கிருப்பார்கள்
இரண்டாம் நாளான இன்று புங்குடுதீவில் இருந்து புறப்பட்டு வேலணை மண்கும்பான்
பகுதிகளில் காணப்படும் ஆலயங்களை தரிசித்து மண்கும்பான் பகுதியில்
இரண்டாம் நாள் தங்கியிருப்பார்கள்
மூன்றாம் நாளான நாளை அங்கிருந்து புறப்பட்டு நணபகல் யாழ் நகரப் பகுதியில்
காணப்படும் சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தை வந்தடையும்.
மாலை சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தில் பாதயாத்திரை மேற்கொண்டவர்கள்
சத்திரம் ஞான வைரவர் ஆலயத்தில் பஜனை பாசுரங்களை பாடி அங்கு இருந்து
யாழ் வில்லுன்றி பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு தரித்து நிற்பார்கள்
நான்காம் நாளான (21.08. 2025) ( அதிகாலை நல்லை கந்தன் தேர் உற்சவத்தில்
கலந்து கொண்டு தேரின் பின்னே இப்பஜனை யாத்திரை தொடர உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பலபகுதிகளிலும் இருந்து இந்த பாதயாத்திரையில் பக்தர்கள் கலந்து
கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது


