Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதொடரும் தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு

தொடரும் தபால் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று 5வது நாளாகவும் தொடரும் சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு,  பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக்
கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும்,  கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த
நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று
பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக,  கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப்
பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு
இம் மாதம் சம்பளம் வழங்கப்படாது எனத் தபால்மா அதிபர் ருவான் சத்குமார
தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments