Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞன் படகு விபத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு,  சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார்

சுண்டிக்குள பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை
வாடியில் இன்று அதிகாலை கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்றது.

இன்றையதினம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில்கடும் காற்றுடன்
கூடிய வானிலை நிலவியது.

இதன் போது மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்,
கடல் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது,  அதே படகு அலையில் சிக்குண்டு குறித்த இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி
சசிதரன் என்று தெரிவிக்கப்படுகிறது.

சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  மருதங்கேணி
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments