Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல இலட்சம் மதிப்பிலான மஞ்சள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல இலட்சம் மதிப்பிலான மஞ்சள் மீட்பு

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பாரிய
தொகை மஞ்சள் மண்டபம் வேதாளை கடற்கரை கிராமத்தில் வைத்து
கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடலோர பாதுகாப்பு படை
இன்று (14) கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் 1600 கிலோகிராம் என்பதுடன் அதன் பெறுமதி சுமார்
2.14 இலட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வீட்டின் உரிமையாளரை தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை
கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக
கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை,  கஞ்சா, சமையல் மஞ்சள்,  சுக்கு,  பீடி இலை,  வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவைகள் அதிகளவில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை
இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை
மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் மூட்டைகள்
கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு
இடம்பெற்றுள்ளது.

40 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 1600 கிலோ எடையுள்ள மஞ்சள் பதுக்கி
வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments