Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவயிறு வீக்கத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர்
கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

பன்னங்கண்டிஇ கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்
கடந்த 21 ஆம் திகதி இவருக்கு திடீரென வயிறு வீக்கம் ஏற்பட்டதால் கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அன்றிரவே யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments