Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக
மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில்
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற
விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய
கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான
சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து குறித்த நீதிவான் அவர்கள்
தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால்
கடந்த 23 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நேற்று (24) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர்
மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட
நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களைப் பொறுப்பேற்று
நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய கௌரவ மேல்
நீதிமன்ற நீதிபதி அவர்கள் புதிய நீதிவான் ஒருவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments