Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு

யாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும்
நேற்று (26) உயிரிழந்தார்.

ஆனைக்கோட்டை,  சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த தாய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு
ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்தார்.

இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தது,  மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.

இந்நிலையில்,  தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று
வந்தார். இருப்பினும்,  சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments