Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை
இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு
நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள்
முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான்
அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

28 மில்லியன் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட சொத்துக்களை
ஈட்டிய விதம் குறித்து வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில்
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments