தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகம் போக்குவரத்து அமைச்சர்
பிமல் ரத்தநாயக்காவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு
மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஐவன், மருத்துவர் பவானந்தராஜா,
தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

