Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமாணவனை முழங்காலில் இருக்கவிட்டு தாறுமாறாக தாக்கிய ஆசிரியர்

மாணவனை முழங்காலில் இருக்கவிட்டு தாறுமாறாக தாக்கிய ஆசிரியர்

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர்
தாக்கியதில். மாணவன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த மாணவன் சில நாட்களாக பாடசாலை வராத காரணத்தினால் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு அனுமதிக்க முடியாதென ஆசிரியர் கூறியுள்ளார்.

பின்னர் குறித்த மாணவனை முழங்காலில் இருக்க விட்டு தலையிலும் முகத்திலும்
தாறுமாறாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் முகத்திலும் தலையிலும் காயங்களுக்கு உள்ளான மாணவன்
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments