Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பில் ஹோட்டலில் தீ விபத்து

கொழும்பில் ஹோட்டலில் தீ விபத்து

கொழும்பு – கிருலப்பனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை
தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டல் இந்திய உணவுகளை விற்பனை செய்யும் இடமென தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments