Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ் சண்டிலிப்பாய் பகுதியில் வன்முறைக்கும்பல் அட்டகாசம்

யாழ் சண்டிலிப்பாய் பகுதியில் வன்முறைக்கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட குழு புகுந்து அட்டகாசம் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த குழு,  வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் வீட்டிலிருந்து எடுத்துச்
சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி,  மாசியப்பிட்டி
சந்தியின் நடுவில் தீ வைத்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments