Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇந்திய பிரதமரை சந்தித்த பிரதமர் ஹரினி

இந்திய பிரதமரை சந்தித்த பிரதமர் ஹரினி

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்
கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே
சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் தனது
ஓ இல் பதிவிட்டுள்ளார்.

கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல்,  புதுமை,  மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும்
மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக
இந்திய பிரதமரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருங்கிய அண்டை நாடுகளாக,  இரு நாட்டு மக்களின் செழிப்பு மற்றும் பிராந்திய
ஸ்திரத்தன்மைக்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய பிரதமர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments