Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 5ஆவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்

கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 5ஆவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்

கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து கனிய மணல்
கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் புல்மோட்டை பிரதேசத்தில்
அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும்
83 ஊழியர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று
தெரிவித்து தங்களுக்கான நீதியை கோரி இன்று (18) ஐந்தாவது நாளாக அவர்களது
அமைதி வழி போராட்டம் தொடர்கிறது.

குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், பலமுறை நிறுவன மேலதிகாரிகளிடமும்,
தொழிலாளர் திணைக்களத்திடமும்,  சம்பந்தப்பட்ட அமைச்சகத்திலும் மனுக்கள்
அளித்தும் இதுவரை எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் பலர் குடும்பச் செலவுகளையும்,  குழந்தைகளின் கல்வியையும் மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

எனவே,  அதிமேதகு ஜனாதிபதி,  அமைச்சர்,  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டின் மூலம் உரிய அமைச்சின் ஊடாக இந்தப் பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்பட்டு,  தங்களுக்குரிய நிலுவை சம்பளங்கள் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

தொடர்ந்தும் தமக்கான தீர்வுகள் கிடைக்காதவிடத்து உண்ணாவிரத போராட்டத்தில்
ஈடுபடவும் தயாராகிவருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments