Sunday, November 23, 2025
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரித்தானியாவிலிருந்து மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த தந்தைக்கு இலங்கையில் நடந்த துயரம்!

பிரித்தானியாவிலிருந்து மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த தந்தைக்கு இலங்கையில் நடந்த துயரம்!

இலங்கையில் தனது மகளின் 34வது பிறந்தநாளைக் கொண்டாட வந்த பிரித்தானியர் ஒருவர் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் Oak Path பகுதியை சேர்ந்த சுற்றுலாப் பயணியான பிரட் மெக்லீன் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனது மகளாக நடாலியின் 34வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் 16 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். தந்தையும் மகளும் மாத்தறையில் உள்ள வெலிகம பகுதிக்குச் சென்று, பின்னர் 23 ஆம் திகதி எல்ல நகரத்திற்கு சென்றுள்ளனர்.

தனது மகளுடன் எல்ல மலைகளைப் பார்வையிடச் சென்ற போது திடீரென மலை உச்சியில் இருந்து பிரட் மெக்லீன் கீழே விழுந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்டு பண்டாரவலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலை அனுப்பி, அங்குள்ள சிறப்பு மருத்துவ அதிகாரியால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர எல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments