Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். நகரிற்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்

யாழ். நகரிற்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்

2026ஆம் ஆண்டிற்கான உலகின் இரண்டாவது சிறந்த பயண இடமாக யாழ்ப்பாணம்
பெயரிடப்பட்டுள்ளது.

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளேனட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,  யாழ்ப்பாணம்,  தனித்துவமான கலாசார பாரம்பரியத்தை கொண்ட இடமாக அமைந்துள்ளமையினால்,  உலகளாவிய ரீதியில் பலரின் ஈர்ப்பை மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள லோன்லி பிளானட் நிறுவனத்தின்
உத்தியோகபூர்வ அறிக்கையில்,  ‘சிறந்த பயணம் 2026’ இன் இத்தாலிய மொழி பதிப்பில் இந்நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை மேம்படுத்தவும்,
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவும் என
எதிர்பார்க்கப்படுவதுடன் சுற்றுலாத் துறையில் சமூக அடிப்படையிலான சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments