திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணை
குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

