நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் இன்றைய தினம் (06)
கைது செய்யப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள்
சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றைய தினம்
(05) சாரதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில்
விடுவிக்கபட்டிருந்தனர்.
அத்துடன் இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம்
மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப்
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர்
யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது
ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

