இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்இ
இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
இன்று (9) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட
அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்,
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

