Monday, June 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பில் சுமந்திரன் - நாமல் திடீர் சந்திப்பு

கொழும்பில் சுமந்திரன் – நாமல் திடீர் சந்திப்பு

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனுடன் கலந்துரையாடியதாக
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சுமந்திரனை சந்தித்து விட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள்,  இளைஞர்களின் வேலையின்மை
தொடர்பான பிரச்சினைகள் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பொதுவான
பிரச்சினைகளாக உள்ளன.

நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்தவும் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்களுக்கு
அழுத்தம் கொடுப்பதே எங்களின் குறிக்கோளாகும்.

எங்களுடன் இணைந்து செயற்படுவது கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சி
தீர்மானிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments