Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநெடுந்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நெடுந்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

யாழ். நெடுந்தீவு மக்கள் அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய
நோய் நிலைகளை குறைத்து அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா
வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை இடமாற்றீடு செய்ய
முடியாத நிலை வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம்
காரணமாக தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு
வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரும் விபத்துக்கள்,  பாம்பு கடி மற்றும் தவிர்க்ககூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு
நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவுக்கான நோயாளர்
கடற்போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments