Friday, August 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

நாவலப்பிட்டி,  பழைய தொடருந்து யார்ட் வீதியில் இன்று (28) ஒரு வீட்டின் மீது
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்
உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஒரு பெண்,  அவரது மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தை என
நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததாகவும்,
பாதிக்கப்பட்டவர்களை மீட்க உள்ளூர்வாசிகள் மற்றும் நாவலப்பிட்டி
பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அது
தோல்வியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments