22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டின்
பாதீடு தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்
ஒருவரது எதிர்ப்புடன் மேலதிக 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (17) தவிசாளர்
சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள்,
புதிய உள்ளீர்ப்புகள், வரி அறவீடுகள், அரச அதிகாரிகளின் ஊதியச்சுமை உள்ளிட்ட பல்வேறு விடையங்களை சுட்டிக்காட்டி காலத்தின் தேவையோட்டத்துக்கேற்ப முன்வைக்கப்படும் பாதீடு உள்ளதால் அதை நிறைவேற்றுவது அவசியம் என்று
தெரிவித்தார்.
இந்நிலையில் சபையின் விவாதத்துக்கு பாதீடு விடப்பட்ட நிலையில் பல்வேறு
விமர்சனங்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ
இல்லாது குறித்த பாதீடு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறை
சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி
தேசிய மக்கள் கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒருவர் எதிராகவும்
குறித்த பாதீட்டை நிராகரித்தனர்.
வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால்
சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவாக
18 வாக்குகளும் எதிராக 4 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த
பாதீடு மேலதிக 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதே நேரம் இரு உறுப்பினர்களை கொண்ட சைக்கிள் கட்சியில் ஒரு உறுப்பினர்
ஆதரவும் மற்றொருவர் எதிராகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

