யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் 800 கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் அதிகாலை
குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
வரணி பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
29 வயதுடைய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்இ வெளிநாட்டில் இருந்து
வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.

