Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைலொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து

லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து

நுவரெலியா – ஹட்டன் (A7) பிரதான வீதியின் வெண்டிகோனர் பகுதியில்
இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி
விபத்தொன்று சம்பவித்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும்,
எதிர்த்திசையில் ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த லொறியும்
மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில்,
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments