கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதி பகுதியில் புதையல் தோண்டிய
நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (11) மதியம் 12:45 மணியளவில் குறித்த பகுதியில்
புதையல் தோண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படையினருக்கு
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் அநுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றுபவர்கள்
என கூறப்படுகின்றது.

