Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கான நிதி வழங்கி வைப்பு

மன்னாரில் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கான நிதி வழங்கி வைப்பு

டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த
வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில்
வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள்
வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 42 இந்து ஆலயங்கள்,  17 கிறிஸ்தவ ஆலயங்கள்,  6
பள்ளிவாசல்கள் என 65 வழிபாட்டு தளங்களுக்கு தலா 25,000 ஆயிரம் ரூபாய்
நிவாரண கொடுப்பனவுகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது

அதே போன்று மூன்று பௌத்த விகாரைகளுக்கு நிவாரண கொடுப்பனவுகள்
வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரச அதிபர்
தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர், பிரதம கணக்காளர்,  திட்டமிடல் பணிப்பாளர்,
உதவி மாவட்ட செயலாளர் கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும்
கோயில் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments