Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபளை பகுதியில் விபத்து: பெண் ஒருவர் பலி

பளை பகுதியில் விபத்து: பெண் ஒருவர் பலி

பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் விபத்து ஒன்று
ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி
என்கின்ற 63 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவதுஇ யாழ்ப்பாணத்திலிருந்து
பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்இ பளையிலிருந்து
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும்
விபத்திற்குள்ளாகியுள்ளது.

டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments