பெப்ரவரி 4 ஆம்திகதி தமிழர் தாயகம் வடக்குகிழக்கில் பல்கலைக்கழக
மாணவர்களின் தலைமையில் நடைபெறும் எதிர்ப்புப் போராட்டத்தில்
தமிழர்கள் தேசமாக அணிதிரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க நாடுகடந்த
தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுக்கிறது.
1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடி
வருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட
தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப் பூதத்திற்கு
தரைவார்க்கப்பட்ட நாளாகும்.
சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த
மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக் குடியேற்றங்கள்
அகற்றப்படவோஇ நிறுத்தப்படவோ அல்லது பெளத்த மயமாக்கல் அகற்றப்படப்
போவதில்லைஇ வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோஇ
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை.
இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களைஇ தமிழர் தேசத்தை
அழித்து ஆக்கிர மித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.
காலங்காலமாக தமிழர்தேசம் இந்நாளை கரிநாளாக பிரகடணப்படுத்தி சிங்கள தேசத்திற்கெதிராகப் போராடிவருவது போல் பல்கலைக்கழக மாணவர்கள் தலையில் இம்முறையும் வடகிழக்கில் போராட்டங்களுக்கான அறைகூவலை விடுத்துள்ளனர்.
தமிழர் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பொதுமக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி, பாடசாலை மாணவர்கள், சிவில் சமூகத்தினர், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிநிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைவரும் கறுப்புப் பட்டிகள் அணிந்தும், கறுப்புக் கொடிகளை ஏந்தியும், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகம், கல்லூரி, பாடசாலைகள் அனைத்திலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் தமது எதிப்பைத் தெரிவிப்பதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின், பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது.
வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெறும்
போராட்டங்களில் பெருமளவில் தமிழர் தேசமாக அணிதிரளுமாறு நாடுகடந்த
தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைக்கிறது.
மேலும் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் விடுத்த அழைப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையைத் தெரிவித்துக் கொள்வதுடன் புலம் பெயர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், தமிழர் வணிக நிலையங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

