Saturday, May 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ். போதனாவில் பலியான தந்தையின் மரணத்தில் சந்தேகம்; மகன் பொலிஸில் முறைப்பாடு

யாழ். போதனாவில் பலியான தந்தையின் மரணத்தில் சந்தேகம்; மகன் பொலிஸில் முறைப்பாடு

காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
நபர் உயிரிழந்த நிலையில்,  வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூராவத்தை சுன்னாகத்தைச் சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன்
என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா
வைத்தியசாலையில் கண்,  காது,  தொண்டை சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு வெள்ளிக்கிழமை (06)
உயிரிழந்தார்.

தந்தையின் மரணம் வைத்தியர்களின் தவறே எனத் தெரிவித்து மகன்
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர்
மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை
மேற்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments