Saturday, May 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

யாழில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில்
இரண்டு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர்
காயமடைந்துள்ளனர்.

பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே
இந்த மோதல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இரண்டு குழுக்கள்
அந்த இடத்திற்கு சென்ற நிலையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக
கூறப்படுகின்றது.

இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை
ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை
கைது செய்துள்ளனர். ஏனையோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன

இந்த மோதல் சம்பவமானது இளவாலை பொலிஸ் நிலையத்தில் இருந்து
200 மீட்டர் தூரத்துக்குள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments