Thursday, April 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் மீட்கப்பட்ட படகில் போதைப்பொருள் மீட்பு

மன்னாரில் மீட்கப்பட்ட படகில் போதைப்பொருள் மீட்பு

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதியாகியுள்ளது.

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றைக் கடற்படையினர் இன்று கையகப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் அந்தப் படகில் இருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குறித்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும்
இரண்டு பொதிகள் மீட்கப்பட்டிருந்தன.

முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்ட சோதனையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை
இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்தப் படகில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ்
போதைப்பொருள் உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும்,  ஹஷிஷ் போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments