Wednesday, April 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுட்ட தம்பதியினர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுட்ட தம்பதியினர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில்
கணவன்,  மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய
தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் வவுனியா,  சதொச வீதியில் மோட்டர் சைககிள் ஒன்று
திருடப்பட்டிருந்தது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப்
பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய,  வவுனியா தலைமை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தினவின் கண்காணிப்பின் கீழ் விசேட ​சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது,  மடு,  இரணை இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய
நபர் ஒருவரும்,  அவருடைய 25 வயதுடைய மனைவி,  மற்றும் 31 வயதுடைய
மனைவியின் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments