Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருமுருகண்டி ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் பலி

திருமுருகண்டி ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளும் மகிழுந்து காரும் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,  மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை
பெற்று வருகிறார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து மகிழுந்து காரில் காயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

பின்பு,  காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியரை போலீசார்
கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவு தற்போது விபத்து தொடர்பாக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments