அக்குரேகொடவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி
புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்ட பகுதி,
ஒரு உயர் பாதுகாப்பு வலயம் அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதுவொரு தனிப்பட்ட சம்பவம் என்றும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு
எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், இத்தாக்குதலில் உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின்
குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய
கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதாகச் சித்தரிக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

