Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடி: ஒருவர் கைது

டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடி: ஒருவர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட்
வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத்
திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட
சுமார் 450 கிலோகிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரையும்இ கைப்பற்றப்பட்ட மீன் மற்றும் வாகனம் என்பனவற்றையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள்
நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments