Sunday, April 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழுக்கு விஜயம் செய்தார் அயோத்தி சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்

யாழுக்கு விஜயம் செய்தார் அயோத்தி சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,  இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்றார்.

உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச
விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்
மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர்,  அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள
தனியார் விடுதிக்குச் சென்றனர்.

அங்கு,  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதன்போதுஇ சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்த ஆளுநர்,  வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட ‘சிவன் யாத்திரைப் பாதை’ மற்றும் ‘இராமாயண யாத்திரைப் பாதை’ ஆகிய நூல்களையும் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, இ சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று
விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments