Friday, April 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி,  ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்
சுரேஷ் சலே,  பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் காணப்பட்ட சாட்சியங்களின்
அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப்
பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த
தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அது குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றார்.

கைதுக்கான காரணத்தை சில மணி நேரங்களுக்குள் வெளிப்படுத்துவது
கடினம் எனக் குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த,
பொலிஸார் தமது கடமையை முறையாகச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments