பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை
எதிர்த்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம்
ஒத்திவைத்துள்ளது.
இவ்வழக்கின் வாய்மொழி சமர்ப்பணங்கள் இன்று (02) நிறைவடைந்ததாக
தெரிவிக்கப்படுகின்றது.
வாதி மற்றும் பிரதிவாதி தரப்புகளின் வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து
வழக்கின் தீர்ப்பை பிறிதொரு திகதியில் அறிவிப்பதாக உயர் நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தனது கைது மற்றும்
தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனக் கூறி, பிள்ளையான் என
அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த அடிப்படை உரிமை
மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

