Thursday, July 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கையில் 205 விமான சேவைகள் அதிரடியாக ரத்து

இலங்கையில் 205 விமான சேவைகள் அதிரடியாக ரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் மோதல்கள் காரணமாக இதுவரை மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து
இன்று (03) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்தாலோசனையின்
பின்னரே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,  நாட்டுக்கு வரவிருந்த 107
விமானங்களும்,  புறப்படவிருந்த 98 விமானங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து,  இந்நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விசா நீட்டிப்பை வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும்இ தற்போதைய சூழ்நிலையால் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதற்கும் விசா வசதிகளை வழங்க வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு,  குடியகல்வு திணைக்களத்துடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் சில விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால்
பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும்,  அதற்கமைய அவ்விமானப்
பயணங்களை மீளமைப்பதற்கு முழுமையான விமான டிக்கெட்டுகளையும் ரத்து செய்ய வேண்டி வரும் என்றும் கூறிய அமைச்சர்,  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப வழங்கவும்,  அதனை வேறு விமானப் பயணத்திற்கு மாற்றுவதற்கும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி தேவையான வசதிகளை செய்து கொடுக்க அனைத்து விமான நிறுவனங்களும் இங்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன்,  ஐரோப்பாவிற்கான விமான சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும்,  மத்திய கிழக்கு பிராந்தியத்தை தவிர்த்து மாற்று வழிகள் ஊடாக இந்த விமான சேவைகள் பயணத்தை ஆரம்பித்துள்ளதால்,  இதற்கு அதிக எரிபொருள் செலவாகும் என்பதனால் நிலைமை சீரடையும் வரை விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பொதிகளை மட்டுப்படுத்த வேண்டி வரும் எனவும் அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments