கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (09) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
630 போதை மாத்திரைகளும், 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
கைதான ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்கு
பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

