Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமின்சார ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

மின்சார ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள
நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும்
அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக்
கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின்
நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளமையை முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர்
எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள்
தற்போது நடைபெற்று வருகின்ற போதிலும்இ அதன் மூலம் ஊழியர்கள்
தமது உடனடிக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என
முகாமைத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராக,  அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ்
கடும் ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments