பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் மீது தாக்கல்
செய்யப்பட்ட முறைப்பாட்டை ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரிக்க
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத
தெரு நாடகத்தை நடத்தி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாகக்
கூறியே அவர்கள் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

