Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலைமரகுற்றிகள் மடக்கிப்பிடிப்பு

40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலைமரகுற்றிகள் மடக்கிப்பிடிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு
செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி A35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலுக்கு அமைவாக இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில் தர்மபுரம் பொலிஸாரின் திடீர் வீதிச் சோதனை மூலம் 40 லட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலைமரக்குற்றிகள் புளியம்பொக்கனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார்
மேற்கொண்டு வருவதுடன் தடையை பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில்
முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments