Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொலிஸ் பாதுகாப்புடன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

பொலிஸ் பாதுகாப்புடன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்
கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில்,  மாவட்ட செயலக சூழலில்
பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு,  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (27) ஒருங்கிணைப்பு குழு தலைவர்
இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர்
நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது.

அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும்,  காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments