Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீர் கட்டணம் திருத்தம் செய்யப்படாது: நீர் வழங்கல் சபை

நீர் கட்டணம் திருத்தம் செய்யப்படாது: நீர் வழங்கல் சபை

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும்,  நீர் கட்டணங்களில் திருத்தம்
செய்யப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களின் அதிகரிப்பு நீர் கட்டணத்தை நேரடியாகப்
பாதிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் வழங்கல் அதிகார சபையின் மொத்த இயக்கச் செலவுகளில் 20%  முதல்
30% வரை மட்டுமே மின்சாரத்திற்காக செலவிடப்படுகிறது.

நீர் கட்டணத் திருத்தம் என்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடைபெறும்
ஒரு கொள்கை. ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கட்டண மாற்றங்கள் எதுவும்
செய்யப்படாது.

அதன்படி,  நீர் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டால்,
அது ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னரே நடைபெறும் என தேசிய நீர் வழங்கல்
மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments