Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை

243.8 மில்லியன் ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய குற்றச்சாட்டில்
கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினவை
பிணையில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவரை 50 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில்
விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்,  2015 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை
சொத்து விபரங்களை வழங்க தவறியுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் அண்மையில் நீதிமன்றத்திடம்,  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments