இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடி படகொன்றையும் அதில் இருந்த நான்கு சந்தேக நபர்களையும் கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
குறித்த படகு பொதிகள் மற்றும் சந்தேக நபர்களுடன் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

