நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது
ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள்
இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி விசாரணை
ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவானது அது தொடர்பான விசாரணைகளை ஆறு மாத
காலத்திற்குள் நிறைவு செய்து, அதற்கான அறிக்கையைத் தன்னிடம்
சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தல்
வழங்கியுள்ளார்.

